விளையாட்டு
Typography

ரியோ ஓலிம்பிக் போட்டியில்,  மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இவருக்கு வயது 23. 

ஆகஸ்ட் 18-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.  6 நிமிடங்கள் நடைபெற்றது. இவர் 8-5 என்ற புள்ளிகள் கணக்கில் கிரிக்கிஸ்தான் வீராங்கனை அய்சூலுவை டைனி பெகோவாவை தோற்டித்தார். இந்த வெற்றியையடுத்து, அதிகாலை தூக்கத்தில் இருந்த இந்தியர்களும் விழித்துகொண்டு வெற்றியை  கொண்டாடினர். மேலும்,  வாட்ஸ் ஆப்களில்  குழுக்களில் தங்களது பதிவேற்றம் செய்தனர். அவருக்கு பேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப்களில்  வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கிறது.

அவரது சொந்த மாநிலமான அரியானாவில் உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்களிடமிருந்து பாராட்டு மழை குவிந்து வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்