விளையாட்டு
Typography

ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்டப் (பட்மின்ரன்) போட்டிகளின் இறுதிப் போட்டியில், உலகின் முதன்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியுற்ற இந்தியாவின் பி.வி.சிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இன்றைய இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 21-19 என்ற கணக்கில் சிந்து முன்னிலை பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு சுற்றுக்களிலும் மரினிடம் 21-12, 21-15  என்ற கணக்கில் பின்தங்கி தோல்வியடைந்தார். 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த முதலாவது வீராங்கனையாக சிந்து திகழ்கின்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்