விளையாட்டு

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிக் கணக்கில் 1-1 என  சமநிலை கண்டுள்ளது.

இன்றுடன் முடிவுக்கு வந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது இரு இன்னிங்ஸிலும் 326, 243 ஓட்டங்களை பெற்றது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 283 ஓட்டங்களை எடுத்தது. கோலி தனது 25 வது சதத்தை பெற்றார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக 287 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இந்திய அணி 140 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. நதன் லியொன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் 26 ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.