விளையாட்டு

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் என அழைக்கப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பேர்னில் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸிற்காக 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களை எடுத்துள்ளது.

முதன் முதலாக டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக களமிறங்கிய மாயங் அகவர்வால் 71 ஓட்டங்களை எடுத்தார். சட்டீஸ்வர் புஜாரா 68 ஓட்டங்களுடனும் விராத் கோலி 47 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இப்போட்டிக்காக முரளி விஜய், ராகுல் ஆகியோர் விலக்கப்பட்டு, ரோஹித் ஷர்மா, மாயங் அகர்வால், ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.