விளையாட்டு

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 8 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியாவின் ஆட்டத்தில் புஜாரா 106 ஓட்டங்களையும், விராத் கோலி 82 ஓட்டங்களையும், ராஹேனே 34 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 63 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் பி.ஜே.கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இப்போட்டியில் விராத் கோலி அடித்த அரைச் சதத்தை அடுத்து, குறித்த ஒரு வருடத்தில் இந்திய கேப்டனாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார் கோலி. 

இந்தியாவின் துடுப்பெடுத்தாட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியினர் மூன்று தடவை கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.