விளையாட்டு

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 54 ஓட்டங்களை எடுத்த நிலையில் 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இன்றைய நாள் ஆட்டம் பந்துவீச்சாளர்களின் ஆட்டமாக மாறிப் போனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஜே.ஜே.பும்ராஹ் 33 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இது அவருடைய பந்துவீச்சு அனுபவத்தில் மிகச் சிறந்த ஆட்டமாகும்.

பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடக்கிய இந்திய அணி 54 ஓட்டஙக்ளுக்குள் மளமளவென 5 விக்கெட்டுக்களை இழந்துவிட்டதுஆஸியின் பந்துவீச்சில் பி.ஜே.கும்மின்ஸ் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். களத்தில் அகர்வால் 28 ஓட்டங்களுடனும், ரிஷாப் பாண்ட் 6 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.