விளையாட்டு

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 258 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இன்னமும் 141 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் நிலையில் கையில் 2 விக்கெட்டுக்களே மீதமுள்ளன. பி.ஜே.கம்மின்ஸ் 61 ஓட்டங்களுடன் இந்தியாவின் வெற்றியை தடுக்க கடுமையாக போராடி வருகிறார்.

இந்தியாவின் பந்துவீச்சில் ஜெடேஜா 3 விக்கெட்டுக்களையும், மொஹ்மட் சமி, பும்ராஹ் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களையும் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுமாயின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெறும்நேற்றைய போட்டியில் பல சுவாரஷ்யங்கள் நடந்தன. முன்னதாக இந்தியா தனது துடுப்பாட்டத்தின் போது, ரிஷாப் பேண்ட் பேட்டிங்கின் போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெயின், ரிஷாப் பேண்டை கேலி செய்து பேசியது விக்கெட் மைக்கில் பதிவாகியிருந்தது. என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆட்கள் தேவை, உன்னால், அந்த வேலையை செய்ய முடியுமா?, சூறாவளி பாதிப்பை தடுக்க சிறந்த தடுப்பாட்கள் தேவை, நீ அங்கு செல்வாயா என பல கேள்விகளை தொடுத்திருந்தார்.

பதிலுக்கு ஆஸியின் துடுப்பாட்டத்தின் போது, பெயின் பேட்டிங்கில் நிற்க, விக்கெட் பின்னால், கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷாப் பேண்ட், அருகில் நின்று கொண்டிருந்த தனது சக வீரர் மாயங்கிடம், «நீ எப்போதாவது தற்காலிக கேப்டன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?, இங்கு ஒருவர் நிற்கிறார். அவரின் விக்கெட்டை வீழ்த்த எதுவுமே செய்ய வேண்டாம். பேசிப் பேசியே ஆட்டமிழப்பார், அது மட்டுமே அவரால் செய்ய முடியும்» என பதிலடி கொடுத்தார். இறுதியில் ரிஷாப் பேண்ட் சொன்னது போல், அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் பெயின். காமெண்டிரியில் இருந்த ஷேர்ன் வார்னோ, பெயினுக்கு இது தேவை தான் என்றார்.

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.