விளையாட்டு
Typography

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெர்பேர்னில் இடம்பெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களையும் இழந்திருந்ததுஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 399 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 261 ஓட்டங்களை எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்ததுஇந்திய துடுப்பாட்டத்தில், முதன்முறையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் களமிறங்கிய மாயங் அகர்வால் 76 ஓட்டங்களையும், சட்டீஸ்வர் புஜாரா 106 ஓட்டங்களையும் முதல் இன்னிங்ஸில் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் மாயங் அகர்வால் 42 ஓட்டங்களையும், ரிஷாப் பேண்ட் 33 ஓட்டங்களையும் எடுத்தனர்இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் பும்ராவின் பந்துவீச்சு மிகச் சி̀றப்பாக அமைந்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தி போட்டி நாயகனாகவும் தெரிவானார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி சிட்னியில் மூன்று நாட்களுக்குள் தொடங்குகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS