விளையாட்டு

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் தொடங்கிய நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

மாயங்க் அகர்வால் 77 ஓட்டங்களை எடுத்தார். களத்தில் விஹாரி 39 ஓட்டங்களுடனும், சட்டீஸ்வர் புஜாரா 130 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர். பந்துவீச்சில் ஹாசெல்வூட் 2 விக்கெட்டுக்களையும், மிச்செல் ஸ்டார்க், நதன் லியொன் தலா 1 விக்கெடிட்னையும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

புஜாரா இத்தொடரில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.