விளையாட்டு

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷாப் பாண்ட் சதங்களினால் 622 ஓட்டங்களை இந்தியா குவித்திருந்தது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது ஆஸ்திரேலியா அணி. இந்திய ஓட்ட எண்ணிக்கையை கடப்பதற்கு இன்னமும் 322 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஃபலோ வன் முறையில் துடுப்பெடுத்துமாறு இந்தியா பணித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ஓட்டங்களுக்கு எந்தவித விக்கெட் இழப்புமின்றி களத்தில் நிற்கிறது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் காலநிலை சீர்கேட்டால் பெருவாரியான போட்டி ஒத்திவைக்கப்பட்டு தாமதமாகவே தொடங்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே செல்கிறது.

எனினும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், சமநிலைப்படுத்தினாலும் போட்டித் தொடரை கைப்பற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பெற்றுக் கொண்ட முதல் டெஸ்ட் தொடர் வெற்றி எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தும்.