விளையாட்டு
Typography

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ பிரிவில் பங்கேற்க  நார்சிங் யாதவ் தகுதி பெற்று இருந்தார்.  கடந்த ஆண்டில் லாஸ்வேகாசில் நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் தகுதியை எட்டினார். கடந்த ஆனி  மாதம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியால் நடத்தப்பட்ட பரிசோதனையில் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.  இரண்டு கட்ட சோதனையிலும் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானதால் அவருக்கு ஒலிம்பிக்  தடை விதிக்கப்பட்டது.

நர்சிங் யாதவ், தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாகவும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார். " சில மாதங்களாகவே இந்த பிரச்னையை எதிர்த்து போராடி வந்தேன். எனினும் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என்று நினைத்தேன். நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும், பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால் போட்டி தொடங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக எனது ஒலிம்பிக் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்' என்கின்றரர் நார்சிங். 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்