விளையாட்டு
Typography

இன்றுடன்  முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் படி, இம்முறையும் அமெரிக்காவே அதிக தங்கப் பதக்கங்கள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

43 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 116 பதக்கங்களுடன் முதலிடத்திலும், 27 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 66 பதக்கங்களோடு பிரித்தானியா இரண்டாம் இடத்திலும், 26 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 70 பதக்கங்களோடு சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளன. போட்டிகளை நடத்தும் பிரேசில், 6 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 18 பதக்கங்களோடு 14ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தோடு 66வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியா சார்பில் முதன்முறையாக பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் மாலிக் சக்‌ஷி வெண்கலப் பதக்கத்தையும் வென்று கொடுத்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS