விளையாட்டு
Typography

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியதற்கு மத்திய அரசு கேல் ரத்னம் விருதை அறிவித்துள்ளது. அதன் படி பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ள பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது. துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று திரும்பியுள்ள ஜீத்து ராய்க்கு மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் களம் கண்டு வந்துள்ள தீபா ஷர்மாவுக்கு என்று மேற்கண்ட வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.  

இன்று நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது. இவருக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்