விளையாட்டு
Typography

ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தலைமையில், இந்திய அணி தற்போது டெஸ்ட் மேட்சுகளை சந்தித்து வருகிறது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 200 ரன்களைக் குவித்து இருந்தாலும், தர வரிசைப் பட்டியலில் பின்னுக்குச் சென்றுள்ளது. தற்போது முதலிடத்தில் பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் உள்ளது. 110 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும் 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முறையே மூன்றாம், நான்காம் இடங்களிலும் உள்ளன. 99 புள்ளிகளுடன் நியூசிலாந்து 5ம் இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியிட்டுள்ளது ICC.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்