விளையாட்டு
Typography

ஐபிஎல்2019 போட்டிகள் கிட்டத்தட்ட தனது அரைவாசி காலத்தை கடந்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தை வீழ்த்தியதன் மூலம் இதுவரை தாம் விளையாடிய 8 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன், பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

கொல்கத்தா அணியினர் இன்றுடன் சேர்த்து தொடர்ந்து இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகலிலும் தோல்வியைத் தழுவிய போதும் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளன.

இன்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா அணி கிரிஸ் லின்னின் 82 அதிரடி ஓட்டங்களால் மொத்தமாக 161 ஓட்டங்களை எடுத்தது. இம்ரான் தஹிர் 27 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழமை போல் இறுதி ஓவர் வரை விளையாடி போட்டியை வெற்றி கொண்டது. பல நாட்களாக சோபிக்காத சுரேஷ் ரைனா இப்போட்டியில் 58 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா அதிரடியாக களமிறங்கி 31 ஓட்டங்களையும் எடுத்தார். இப்போட்டியில் எடுத்த நான்கு விக்கெட்டுக்களையும் இணைத்து, இம்ரான் தஹீர் மொத்தமாக 13 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் முன்னிலை வகிக்கிறார். நேற்று பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வென்றதன் மூலம் மூலம் இம்முறை தொடரில் முதலவாது வெற்றியை பெற்றுக் கொண்டது பெஙக்ளூர் அணி. பஞ்சாப் அணி சார்பில் கிரிஸ் கேய்ல் 99 ஓட்டங்களை எடுத்த போதும், கோலியின் 67 ஓட்டங்கள், ஏடிபி வில்லியர்ஸின் 59 ஓட்டங்கள் இம்முறை பெங்களூர் அணி வெற்றி பெற காரணமானது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்