விளையாட்டு
Typography

ஐபிஎல் 2019 தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி நேற்று தனது முதல் வெற்றியை பெற்றுக் கொண்டது பெங்களூர் அணி. இப்போட்டியில் மிகச் சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கியிருந்தனர் கோலி மற்றும் ஏபிடி வில்லியெர்ஸ்.

இருவரும் இயல்பில் நல்ல நண்பர்கள். இப்போட்டி முடிவடைந்ததன் பின்னர் வில்லியெர்ஸ் கோலியிடம், எப்படி பல்வேறு விமர்சனங்களையும் கடந்து தொடர்ந்து போட்டியில் கவனம் செலுத்தி இவ்வளவு சாதனைகளை படைக்க முடிகிறது எனக் கேட்டார். அதற்கு கோலி சொன்ன பதிலில்,  முன்னர் அதிகம் தான் உணர்ச்சிவசப்படக் கூடியவன் எனவும், தற்போது திருமணத்திற்கு முன்னர் தன்னை மிக நிதானமாக அமைதியாக செயற்பட வைக்க, தனது அழகான மனைவி துணை புரிவதாகவும் கூறுகிறார் கோலி. திரைப்பட நடிகை அனுஷ்கா ஷர்மாவும், கோலியும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக தங்கள் விளையாட்டுத் திறமையின் பின்புலத்தில் இருக்கும், துணை புரியும் தமது குடும்பத்தினர் பற்றி இவ்வளவு வெளிப்படையாக கூறுவது மிக அரிது. ஆனால் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் இருக்கும் பெண்ணை பெருமைப்படுத்துவதில் தயக்கம் ஏதும் இல்லை கோலிக்கு. 

விராத் கோலி - ஏபிடி வில்லியெர்ஸ் வீடியோவை இதில் காணலாம் : 

https://www.iplt20.com/3854a398-3246-489f-aaf7-5863e3eadd5d

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS