விளையாட்டு

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை அணிகளுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 1 ஒரு ஓட்டத்தால் போராடி தோற்றது

முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 161 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53 ஓட்டங்களை எடுத்தார்.

பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே ஷேன் வட்சன், பஃ து பிளெசிஸ், சுரேஷ் ரைனா ஆகியோரை இழந்தது. அம்பதி ராஜுடு மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இணைந்து ஒரு சிறப்பான இணைப்பாட்டத்தை தொடங்கியிருந்த போதும், அம்பதி ராஜுடு 29 ஓட்டங்கள் எடுத்த போது யுவ்வேந்திரா சஹாலின் பந்துவீச்சின் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தோனியுடன் இணைந்து களத்தில் எவராலும் சிறப்பாக விளையாட முடியவில்லை. தோனி தன்னந்தனியாக நிதானமாக துடுப்பெடுத்தாடி தனது அரைச் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இறுதி ஓவரில் சென்னை அணிக்கு 24 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலை உருவானது. தோனி முதல் பந்தில் பவுன்றியும், அடுத்தடுத்து இரு சிக்ஸர்களும், நான்காவது பந்தில் இரு ஓட்டங்களும், ஐந்தாவது பந்தில் மறுபடியும் சிக்ஸரும் விளாசினார். டெத் ஓவரில் தோனி அதிரடியாக ஆட்டும் தனது ஃபினிஷிங் திறமையை இளந்துவிட்டார் என நினைப்பவர்கள் தோனியின் நேற்றைய ஆட்டத்தை பார்க்க.

இறுதி பந்தில் இரு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் உமேஷ் யாதவ் மிக மெதுவாக பந்தை வீச, தோனியின் துடுப்பில் படாத பந்து நேரடியாக விக்கெட் கீப்பிங்கில் நின்ற பார்திவ் படேலிடம் சென்றது. தோனியும், அவருடன் களத்தில் நின்ற ஷர்துர் தாஃகூரும் எப்படியாவது ஒரு ரன்னை எடுப்பதற்கு முயற்சித்த போதும், பார்திவ் படேலின் மிகச்சிறப்பாக பந்துவீச்சில் (throw) ஷார்துல் தாகூர் கிரீஸை எட்டுவதற்கு ஊசி முனை தூரத்தில் பந்து விக்கெடட்டில் பட்டதால் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இன்றைய தோனியின் தன்னந்தனியாக அதிரடிய் ஆட்டமும், 48 பந்துகளில் அவர் எடுத்துக் கொண்ட 84 ஓட்டங்களும், பெஙக்ளூர் அணியை மாத்திரம் அல்ல, போட்டியை நேரடியாக பார்த்துக் கொண்ட எவரையும் ஒரு கணம் சிலிர்க்க செய்திருக்கும். இப்போட்டியில் தோற்ற போதும், 7 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி எனும் நிலையில் சென்னை அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் 3 இல் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வி என 6 புள்ளிகளுடன் இறுதியிடத்திலேயே இருக்கிறது.

ஆனால் அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் பெங்களூர் அணி தொடர்ந்து வெற்றி பெற்றால் ஃபிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இன்னமும் தக்க வைத்துக் கொள்ளலாம். சென்னை அணியின் அடுத்த போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐதராபாத் அணியுடன் நடைபெறுகிறது. நாளை ராஜஸ்தான் அணிக்கும், டெல்லி அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.