விளையாட்டு
Typography

 

இன்று மே 1ம் திகதி, இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்து, சென்னை அணி மறுபடியும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், மொத்தம் 18 புள்ளிகளை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் மெதுவான ஆட்டத்தை தொடங்கிய போதும், சுரேஷ் ரைனா, ஜடேஜா, தோனி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் 179 ஓட்டங்களை எடுத்தது. சுரேஷ் ரைனா 59 ஓட்டங்களையும், எம்.எஸ்.தோனி 44 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பதிலுக்கு களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய போதும், மொத்தம் 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 44 ஓட்டங்களை அதிக பட்சமாக எடுத்தார். பந்துவீச்சில் இம்ரான் தஹீர் 4 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அதில் முக்கியமாக தோனியின் இரு ஆட்டமிழப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும், க்ரிஸ் மோரிஸ் ஆகியோரை கணப்பொழுதில் விக்கெட் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி.

ஃபிளே ஆஃப் முதலாவது போட்டி எதிர்வரும் மே 7ம் திகதி சென்னையில் இடம்பெறுகிறது. அதன் முன் சென்னையின் இறுதி முதல் சுற்றுப் போட்டி எதிர்வரும் 5ம் திகதி பஞ்சாப் அணியுடன் நடைபெறுகிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS