விளையாட்டு
Typography

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான திலகரத்ன டில்சான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து முழுவதுமாக ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். 

எதிர்வரும் 28ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கு பின்னர் இடம்பெறவுள்ள இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 39 வயதாகும் டில்சான் அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். 

329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டில்சான், 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.  78 இருபதுக்கு இருபது போட்டிகளை சந்தித்துள்ள அவர், 1 சதம் 13 அரைச்சதங்கள் அடங்களாக 1884 ஓட்டங்களை விளாசியுள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS