விளையாட்டு
Typography

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. 

சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 11 உலகக் கோப்பை போட்டிகளில் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

1975, 1979ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளும், 1983ஆம் ஆண்டு இந்தியாவும், 1987ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவும், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 1996ஆம் ஆண்டு இலங்கையும், 1999, 2003, 2007ஆம் ஆண்டுகள் தொடர்ச்சியாக அஸ்திரேலியாவும், 2011ஆம் ஆண்டு இந்தியாவும், 2015ஆம் ஆண்டு மறுபடியும் அவுஸ்திரேலியாவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இது வரை ஒருமுறை கூட உலக கிண்ணத்தை வெல்லவில்லை. அதே போல் வலுவான அணிகளான நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்டவை முதன் முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை ஏற்கெனவே 4 முறை நடத்தியுள்ள இங்கிலாந்து தற்போது 2019இல் 5ஆவது முறையாக நடத்துகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 11 மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்