விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிட்டார். 

37 வயதாகும் யுவராஜ் சிங் ஓய்வு குறித்து தெரிவித்துள்ளதாவது, “இந்திய அணிக்காக 400க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். அத்துடன் 2011 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை மறக்க முடியாது. 28 ஆண்டுகள் கழித்து உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட என்ன பெருமையுள்ளது.

கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் நான் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது.” என்றுள்ளார்.