விளையாட்டு
Typography

இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 16 ஆவது ஒரு நாள் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப் படாது ரத்து செய்யப் பட்டது.

மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப் பட்டன.

இம்முறை இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் பல அங்கு தொடர்ந்து பெய்து வரும் கன மழைகள் காரணமாக இனியும் பாதிக்கப் படலாம் என கவலை தெரிவிக்கப் படுகின்றது. ஏற்கனவே 3 போட்டிகள் இதுவரை மழையால் கைவிடப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை செவ்வாய்க்கிழமை கைவிடப் பட்ட போட்டி காரணமாக வங்க தேச அணி கவலை அடைந்துள்ளது. ஏனெனில் நடப்பு சூழலில் இலங்கை அணியை விட வங்க தேச அணி சற்று வலிமை கூடிய அணியாகக் கருதப் படுகின்றது.

இதேவேளை நாளை புதன்கிழமை அவுஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளும் மறுநாள் வியாழக்கிழமை இந்தியா நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS