விளையாட்டு
Typography

இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை அவுஸ்திரேலியா 64 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டு இழப்புக்கு 285 ரன்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபின்ச் 100 ரன்களையும் டேவிட் வார்னெர் 53 ரன்களையும் குவித்தனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ரன்கஓளை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் ஜேசன் பெரெண்டோர்ஃப் 10 ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் 8.4 ஓவர்கள் வீசி 43 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

புதன்கிழமை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் வியாழக்கிழமை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளும் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தான் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் 6 இல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இந்தியா 9 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் தான் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியுற்று வெளியேறும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS