விளையாட்டு
Typography

இன்று புதன்கிழமை இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டு இழப்புக்கு 237 ரன்களை அந்த அணி குவித்தது.

நியூசிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் நேஷம் 97 ரன்களையும் கொலின் டே கிராண்டோம்மே 64 ரன்களையும் குவித்தனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அஃபிரிடி 10 ஓவர்கள் வீசி 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 241 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் பாகிஸ்தான் சார்பாக பாபர் அஷாம் 101 ரன்களையும் ஹரிஸ் ஷோஹலி 68 ரன்களையும் பெற்றனர்.

வியாழக்கிழமை இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும் வெள்ளிக்கிழமை இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் தமக்கிடையே பலப் பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இந்தியா 9 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS