விளையாட்டு
Typography

லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர்  தத்துக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அதில் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துக்கொண்டு இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார். இவருடன் போட்டியிட்ட ரஷ்ய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால், அவர் அப்போது ஊக்க மருந்து உட்கொண்டு இருந்தார் என்பது ரத்த மாதிரி ஸோதனையில் உறுதியானது. இதற்கிடையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அந்த ரஷ்ய மல்யுத்த வீரர் கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், இறந்து போன ரஷ்ய வீரர் ஊக்க மருந்து உட்கொண்டு இருந்தது உறுதியானதை அடுத்து, வெள்ளிப் பதக்கம் இந்திய வீரர் யோகேஷ்வர் தத்துக்கு வழங்கப்படும் என்று ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. யோகேஷ்வர் தத்துடன் போட்டியிட்டு தோல்வியடைந்தகொரிய  வீரருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS