விளையாட்டு
Typography

சீனாவில் நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றார்.

இந்தியா சார்பில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்து கொண்ட இவர், இறுதிப் போட்டியில், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை இந்தியாவிற்கு வென்றெடுத்தார்.

சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல், போட்டிகள் பலவற்றில் ஏற்கனவே தங்கம் வென்று சாதனைப் படைத்திருந்த இவரது சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு சிறப்பாக இவ் வெற்றி அமைகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS