விளையாட்டு
Typography

பிரேசிலில் நடைப்பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1. 98 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரை அடுத்து அமெரிக்க வீரர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், 1. 86 மீட்டர் உயரம் தாண்டி உத்திர பிரதேச வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.இதில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டு இருக்க, தாய் சரோஜா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாரியப்பன், சிறுவயதில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, காலில்  வாகனம் ஏறி, ஊனமடைந்தார் என்று தெரிய வருகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு தமிழக அரசு 2 கோடி ரூபாயும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் 75 லட்சம் ரூபாயும் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்