விளையாட்டு
Typography

சக வீரராக விராட் கோலியின் திறமையை அறிந்ததை காட்டிலும் இப்போது அதிகமாக அறிகிறேன் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். 

மேற்கொந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தலைமையேற்றார். அணி வெற்றி வாகை  சூட்டி, இந்தியா திரும்பியது. இதுக்  குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கருத்துத் தெரிவிக்கையில், விராட் ஒரு திறமையான ஆட்டக்காரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.  

அதோடு, தாம் முன்பு அவரை ஒரு சக ஆட்டக்காரராக பார்த்து வந்ததை விட இப்போது ஒரு பயிற்சியாளர் என்கிற வகையில் அவரைப் பார்க்கும்போது அவரது திறமைகள் வித்தியாசமாகப் பளிச்சிடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இன்று நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை இன்று கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.  

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.  

விராட் கோலி தலைமையிலான இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “ விராட் கோலி (கேப்டன்), ரகானே, அஷ்வின், ஷிகர் தவான், ரவீந்தர் ஜடேஜா, புவனேஷ்குமார், அமித் மிஸ்ரா, முகம்மது சமி, புஜாரா, கே.எல்.ராகுல், சஹா, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்