விளையாட்டு
Typography

உலகளாவியரீதியில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்  விளையாட்டு வீரர்களாக மாற்றுத் திறனாளிகள்  உருவாகி வருகிறார்கள். ரியோ ‌பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் ஏற்கனவே தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது ‌ இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

ஈட்டி எறிதல் போட்டியின் எப்46 பிரிவில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா 63.97‌மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார். கடந்த 2004‌-ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 62.15 மீட்டர் தூரம் எறிந்து தாம் நிகழ்த்திய சாதனையை முறியடித்து மீண்டும் ஒரு உலக சாதனையை  தற்போது நிகழ்த்தியுள்ள அவர்,  பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்ற ‌ஒரே இந்தியர் என்ற ‌சாதனையையையும்   பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்