விளையாட்டு

டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னனி வீரரான ஜோகோவிச் கொரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் அட்ரியா டூர் என்ற பெயரில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டி ஒன்றை உலக டென்னிஸ் சாம்பியன் நோவக் ஜோகோவிச் நடத்தினார். இதில் பங்கேற்ற சிலவீரர்களுக்கு பரிசோதனையின் போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தபின் இறுதி ஆட்டம் ரத்தானது.

மிக ஆர்வாமாக முன்னின்று போட்டிகளை நடாத்திய நோவக் ஜோகோவிச்சுக்கும் அவரது மனைவிற்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின்போது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்ட நோவக் ஜோகோவிச் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்; எனது மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர்கள் வெகுவிரைவில் குணமடைந்து நோயிலிருந்து மீள்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அதன் தொடர்பாக எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் எனினும் தான் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 33 வயதான உலக சாதனை படைத்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் போட்டி தொடர் ஒன்றிற்கு செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போடும் நிலை வந்தாலும் அதை பயன்படுத்தமாட்டேன் என எதிர்ப்பு கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.