விளையாட்டு
Typography

மும்பையில் பிசிசிஐ பொதுகுழுக் கூட்டம் அதன் தலைவர் ஷஷாங் மனோகர் தலைமையில் இன்று கூடியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 87வது பொதுக் குழு இன்று மும்பையில் கூடியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஒழுங்குபடுத்த  பல்வேறு நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தது. அந்த கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதுக் குறித்த, பிசிசிஐயின் முடிவு என்ன என்று உச்ச நீதிமன்றம் பல கால கட்டங்களில் வலியுறுத்தி வந்தது.  

இந்நிலையில்தான்  இன்று இந்த கூட்டம் கூடியுள்ளது. லோதா கமிட்டி அறிவுரைப்படி 2015-16 நிதியாண்டு தொடர்பான விவாதங்கள் மட்டும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றாலும், பிசிசிஐ.யின் புதிய செயலரும் இன்றைய கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார் என்றும்  தெரிய வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்