விளையாட்டு
Typography

நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை என்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். 

காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருவதற்கும், தற்போது தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெற்று வருவதற்கும் பாகிஸ்தான்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சுமுகமான உறவு இல்லை. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இல்லை என்று அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.  

மேலும், நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு எந்தவிதமான போட்டிகளும் குறிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS