விளையாட்டு
Typography

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரிய சங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு, இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், இதில் ஒரு பரிந்துரையை கூட இதுவரை ஏற்றுக்கொள்கிறோம், அமல் படுத்துகிறோம் என்று பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை.  

உச்ச நீதிமன்றம் பல முறை வலியுறுத்தி கால அவகாசம் கொடுத்தும், பிசிசிஐ அலட்சியமாக இருக்கும் பட்சத்தில், லோதா தலைமையிலான கமிட்டி வெகுவாக கோபம் அடைந்துள்ளது. எனவே, பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளது.பிசிசிஐக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், மேலும், பிசிசிஐக்கு கால அவகாசம் கொடுத்துள்ளதோடு, வழக்கு விசாரணையை வருகிற அக்டொபர் மாதம் 6ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS