விளையாட்டு
Typography

ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்காததால், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பிசிசிஐ குழுவை நெறிமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம், நீதிபதி லோதா தலைமையில், ஒரு குழுவை நியமித்து, பரிந்துரைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவுப் பிறப்பித்து, லோதா கமிட்டியும் பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பிசிசிஐக்கு சம்மதம் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ, இதுக் குறித்துப் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி இருந்தது.  

இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், வருகிற 9ம் திகதி இந்தியாவில், இங்கிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளை எதிர்க்கொள்ள உள்ளது.மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள். இந்த போட்டிகளில் பங்கேற்க வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு விருந்தோம்பல் செலவு இவைகளை கவனிக்க பணம் தேவைப்படுகிறது பிசிசிஐக்கு. ஆனால், லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றால் மட்டுமே பிசிசிஐ போட்டிகளை நடத்த வங்கிகளில் பணம் எடுக்க முடியும்.  

லோதா கமிட்டியிடம், பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ள நிலையில், விருந்தோம்பலுக்கு எவ்வளவு செலவாகும் என்று, அறிக்கைத் தயாரித்து அளிக்கும் படியும், நாளை பிரமான பத்திரத்தை நீதிமன்றத்தில் பிசிசிஐ தாக்கல் செய்த பிறகு இதுக்குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் லோதா தலைமையிலான கமிட்டி தெரிவித்துள்ளது.  

இதனால், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கான போட்டிகளை நடத்துவதில் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்