விளையாட்டு
Typography

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்த்தன நியமிக்கப்ப்டடுள்ளார்.  

கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் இருந்து வந்தார்.  தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அவருக்குப் பதிலாகவே மஹெல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

மஹெல ஜெயவர்த்தன சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதும் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் விசேட துடுப்பாட்ட பயிற்சியாளராக சில தடவைகள் கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்