விளையாட்டு
Typography

டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே தேவை.

மும்பை வாங்கடே மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. கடைசியாக 2013 நவம்பரில் வெஸ்ட்  இண்டீசுடன் நடந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் & 126 ரன் வித்தியாசத்தில் வென்றது. அது சச்சின் விளையாடிய கடைசி டெஸ்ட்  போட்டியாகும்.

வாங்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்டிலும் வென்றுள்ளது. இங்கு இந்தியா 24 டெஸ்டில் 10  வெற்றி கண்டுள்ளது. 

இங்கிலாந்து அணியில் அறிமுகமாகும் கீட்டன் ஜென்னிங்ஸ், தென் ஆப்ரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்சின் மகன் ஆவார். 

கடந்த 20 ஆண்டுகளில் வாங்கடேவில் நடந்த 9 டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் யாரும் 5+ விக்கெட் வீழ்த்தியதில்லை. ஸ்பின்னர்கள் 13 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்