விளையாட்டு
Typography

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்துள்ளது.  பிரிஸ்பேனின் கேபாவில் நடைபெற்று வந்த இப்போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 429 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களையும் எடுத்தது. 

இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி மிக வேகமாக 202 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை டிக்ளே செய்தது. பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன. 

மிக வேகமாக ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அனி, அசார் அலி, யூனிஸ் கானின் அதிரடி ஆட்டத்தில் வேகமாக முன்னேறியது. அசார் அலி 71 ஓட்டங்களையும், யூனிஸ் கான் 65 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து மறுபடியும் விக்கெட்டுக்கள் வேகமாக சரியத் தொடங்கின. ஆனால் அசாத் ஷஃபிக் களமிறங்கியதிலிருந்து போட்டியின் போக்கு மாறத் தொடங்கியது. அவர் ஒரு புறம் சதமடிக்க, மறுபுறம் மொஹ்மட் அமீர் அரைச் சதத்தை நெருங்கினார். 

இதையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் போது பாகிஸ்தான் அணி 382 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இறுதி வரை போராடி 450 ஓட்டங்களை நெருங்கிய போது அசாத் ஷஃபிக் ஆட்டமிழந்தார். மறுமுனையில் யாசிர் ஷாஹாவும் ரன் அவுட்டில் ஆட்டமிழக்க இறுதியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது ஆஸ்திரேலிய அணி. 

டெஸ்ட் போட்டி ஒன்றில் இப்படி மிக குறைவான ஓட்ட வித்தியாசத்தில் ஒரு அணி போராடித் தோல்வி அடைவதும், வெற்றி பெறுவதும் அபூர்வமாக நடைபெறும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்