விளையாட்டு
Typography

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கருண் நாயர் முச்சதமடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 

கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ரன்களை குவித்தார். இந்தியா சார்பில் முச்சதமடித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். முன்னதாக ஷேவாக் இரு தடவை முச்சதம் அடித்துள்ளார்.  அதோடு தனது முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய வீரர்களில் கருண் நாயர் மூன்றாவது வீரர். அதோடு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத்தொடங்கிய முதல் மூன்று இன்னிங்ஸிற்குள் முச்சதம் அடித்த முதல் வீரரும் கருண் நாயர் தான்.  இந்த வருடத்திற்கான அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பெற்ற வீரரும் அவரே. 

இச்சாதனைகளை அடுத்து இந்திய அணி தனது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக 759 ஓட்டங்களை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து இப்போட்டியை சமநிலைப்படுத்துமா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்