விளையாட்டு
Typography

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இதை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 4-0 என நான்கு தொடர் வெற்றிகளை பெற்று புதிய உத்வேகத்தை அளித்துள்ளது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. 

 இன்றுடன் முடிவுக்கு வந்த சென்னை டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் மதிய இடைவேளை நேரம் வரை இங்கிலாந்து அணி எந்தவொரு விக்கெட்டையும் இழக்காது ஆடிவந்தது. அலெஸ்டீர் கூக் 49 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 54 ஓட்டங்களுடனும் இருந்த போது, ஜெடேஜா அவர்களை வீழ்த்தினார். இதையடுத்து போட்டி தலைகீழானது. ஜெடேஜாவின் மிகச் சிறந்த பந்துவீச்சில் இங்கிலாந்தின் பல வீரர்கள் தடுமாறி ஆட்டமிழந்தனர்.  

இதையடுத்து போட்டி முடிவடைய சுமார் 40 நிமிடங்கள் இருந்த போது இங்கிலாந்தின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.  ஜடேஜா 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 759 ஓட்டங்களை எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 199 ஓட்டங்களையும் கருண் நாயர் 303 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்