விளையாட்டு
Typography

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளின் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் மஹேந்திரசிங் தோனி நேற்று புதன்கிழமை விலகிக் கொண்டார். 

ஏற்கனவே அவர் டெஸ்ட் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார்.

இந்த நிலையில், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேற்று மாலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் சாதாரண வீரராக நீடிப்பது தொடர்பில் தனக்கு பிரச்சினை இல்லை என்றும் தோனி அறிவித்துள்ளார்.

இதனிடையே, இனி, இந்தியக் கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளுக்குமான தலைவராக விராட் கோஹ்லி நீடிப்பார் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS