விளையாட்டு
Typography

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வைட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் அணி போராடி வருகிறது. இடையிடையே மழை குறுக்கிட்டு வருவதால் போட்டி சமநிலையில் முடிவடையும் வாய்ப்பே அதிகமாக இருந்தது.

ஆனால் இதனை சுதாகரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய அணி, எப்படியும் இப்போட்டியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முயற்சியில் தனது இரண்டாம் இன்னிங்ஸில் அதிரடியாக 241 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை டிக்ளே செய்தது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 538 ஓட்டங்களையும், பாகிஸ்தான் 315 ஓட்டங்களையும் பெற்றன. ஆஸ்திரேலியா சார்பில் ரென்ஷாவ் 184 ஓட்டங்களையும், டாவிட் வார்னர் 113 ஓட்டங்களையும், ஹாண்ட்ஸ்கொம்ப் 110 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் யூனிஸ் கான் தனது ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களை எடுத்தார். இதில் அவரது சாதனைச் சதமும் அடங்கும். அதாவது தனது தாயக மண்ணைத் தர்த்து கிரிக்கெட் மைதானங்கள் அமைந்துள்ள 11 நாடுகளிலும் சதமடித்த முதல் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுக் கொண்டார். நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் அடித்த முதலவாது சதம் மூலம் இச்சாதனை நிறைவேறியுள்ளது.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS