விளையாட்டு
Typography

அனுராக் தாகூர் இமாச்சல் பிரதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பிசிசிஐ-ல் சில சீர்திருத்தங்கள் கொண்டு வர ஓய்வு பெற்ற நீதிபதி லோதா
தலைமையில் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இதனிடையே, லோதா
குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தாமதித்து வந்ததால், பிசிசிஐ-ன் தலைவர்
பதவியில் இருந்து அனுராக் தாகூர் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது அனுராக் தாகூர் இமாச்சல் பிரதேச ஒலிம்பிக்
கமிட்டியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரேந்தர்
கன்வார் சீனியர் துணை தலைவராகவும், ராஜேஷ் பண்டாரி துணை தலைவராகவும்
தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அனுராக் தாகூர் இமாச்சல் பிரதேச
ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பொறுப்பில்
இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS