விளையாட்டு
Typography

ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று: 49 ரன் வித்தியாசத்தில் இந்தியா
அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்றின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில்
இந்திய அணி 49 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

கொழும்பு்து ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற
தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்
இழப்புக்கு 205 ரன் குவித்தது. கேப்டன் மித்தாலி ராஜ் அதிகபட்சமாக 64 ரன்
(85 பந்து, 10 பவுண்டரி), மோனா மேஷ்ராம் 55 ரன் (85 பந்து, 5 பவுண்டரி, 2
சிக்சர்) வேதா 18, தேவிகா 19, ஷிகா 21 ரன் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்
ஆப்ரிக்கா களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை
சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா 46.4 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல்
அவுட்டானது. த்ரிஷா 52, காப் 29, கேப்டன் டேன் வான் 20 ரன் எடுக்க, மற்ற
வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷிகா 4,
ஏக்தா 3, தீப்தி, பூனம், ராஜேஸ்வரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய
அணி 2 புள்ளிகள் பெற்றது.

இலங்கை வெற்றி: பாகிஸ்தான் அணியுடன் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ்
போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் 50
ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்; இலங்கை 47.4 ஓவரில் 5 விக்கெட்
இழப்புக்கு 216. இன்று ஓய்வு நாள். நாளை நடக்கும் போட்டிகளில் இலங்கை -
தென் ஆப்ரிக்கா, இந்தியா - வங்கதேசம் மோதுகின்றன

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்