விளையாட்டு
Typography

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றால் இந்திய அணிக்கு ரூ6.5 கோடி பரிசுத் தொகை கிடைக்க உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1 ஆக இருக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் எந்த அணி நம்பர்-1 ஆக இருக்கிறதோ அந்த அணிக்கே பரிசுத் தொகை கிடைக்கும். தற்போது, ஐசிசி டெஸ்ட்  தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 109
புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. 

இதனால், புனேவில் வரும் 23ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், நம்பர்-1 இடத்தை உறுதி செய்வதுடன், ஐசிசியின் ரூ 6.5 கோடி பரிசுத் தொகையை பெற்றுவிடலாம். 

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 வெற்றி பெற்றாலே போதும், நம்பர்-1 இடம் பறிபோகாது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா நம்பர்-1 இடத்தை பிடிக்க 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். எனவே, புனேவில் இந்தியா வெல்லும் பட்சத்தில் அன்றே ரூ 6.5 கோடியை உறுதி செய்து விடலாம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS