விளையாட்டு
Typography

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 2வது இடத்தையும், ஹர்மான்பிரீத் கெளர் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் மிதாலி, கெளர் ஆகியோர் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 804 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மிதாலி ராஜ் 744 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். ஹர்மான்ப்ரீத் கெளர் 574 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தில் உள்ளார். 

மகளிர் பெளலிங் தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 3-ஆவது இடத்தில் உள்ளார். அவர் காயம் காரணமாக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதபோதும், இறக்கத்தைச் சந்திக்கவில்லை. 

தென் ஆப்பிரிக்காவின் மெரிஸானே காப், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான இக்தா பிஸ்த் 8-ஆவது இடத்தில் உள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்