விளையாட்டு
Typography

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரில் விளையாடுகிறது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்த தொடர், கிரிக்கெட்
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே இதுவரை நடந்துள்ள 90 டெஸ்ட்
போட்டிகளில் ஆஸ்திரேலியா 40 வெற்றியும், இந்தியா 24 வெற்றியும்
பெற்றுள்ளன. 25 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. மேலும், 14 முறை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், ஆஸ்திரேலியா அணியால் 4 முறை
மட்டுமே தொடரை கைப்பற்ற முடிந்தது. இதனால், இன்றைய போட்டி ரசிகர்களால்
மிகவும் எதிர்பார்ப்புடன் துவங்கி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS