விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இதன்படி தற்போது ஆண்டுக்கு ரூ.1 கோடி பெறும் ‘ஏ’ பிரிவு வீரர்கள் ரூ. 5 கோடியும், ரூ. 60 லட்சம் பெரும் வீரர்கள் ரூ. 2 கோடியும், ரூ.35 லட்சம் பெரும் ‘சி’ பிரிவு வீரர்கள் ரூ. 1 கோடியும் சம்பளமாக கிடைக்கும். இத்திட்டத்தை அமல் படுத்துவது குறித்து விரைவில்
அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.