விளையாட்டு

தொடர் வெற்றிகளைப் பார்த்து வீர்ர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது
ஆஸ்திரேலியாவுடன் இந்திய வீரர்கள் படுத்தோல்வி அடைந்ததுக்
குறித்து,முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

புனேவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒருசில மணி நேரத்தில் அனைத்து
விக்கெட்டுக்களையும் இந்திய அணி பறிகொடுத்து படுதோல்வியை அடைந்தது.
களத்தில் நின்று ஆட வேண்டும் என்பதை கேப்டன் கோஹ்லி உள்பட அனைவரும்
மறந்துவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியபோது,
இந்திய அணி வீரர்களுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை. தேனீர்
இடைவேளைக்கு பின் அரைமணி நேரத்துக்குள் அனைத்து விக்கெட்டையும்
பறிகொடுத்தனர். அவர்கள் களத்தில் நிற்கவேண்டும் என்பதையே மறந்து
விட்டனர். தொடர் வெற்றிகளைப்பார்த்து அவர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி
விட்டது, என்று கூறினார்.