விளையாட்டு
Typography

கொல்கத்தா விஜய் ஹசாரே டிராபி டி பிரிவு லீக் ஆட்டத்தில், கேப்டன்
டோனியின் அதிரடி சதத்தால் ஜார்க்கண்ட் அணி 78 ரன் வித்தியாசத்தில்
சட்டீஸ்கர் அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில்
வென்ற சட்டீஸ்கர் முதலில் பந்துவீசியது. ஜார்க்கண்ட் அணி 50 ஓவரில் 9
விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்தது.

கேப்டன் டோனி 129 ரன் (107 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்), ஆனந்த் சிங்
32, ஷாபாஸ் நதீம் 53 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி
38.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேற்று முன்தினம் கர்நாடக
அணியுடன் முதல் லீக் ஆட்டத்தில் மோதிய ஜார்க்கண்ட் 5 ரன் வித்தியாசத்தில்
போராடி தோற்றது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS