விளையாட்டு
Typography

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி, படுதோல்வியை
சந்தித்தது.இதுகுறித்து கிளார்க் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான முதல்
டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது. என்னைப்
பொறுத்தவரையில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உண்மையான சோதனைக்காலம்
துவங்கிவிட்டது. இதில் இருந்து அவரேதான் மீண்டு வரவேண்டும்.

மேலும், இதுவரை அவரது தோளில்தான் இந்திய அணி வென்றது என்பது தற்போது
தெளிவாகிவிட்டது. இனி அவருக்கு வீரர்களின் ஆதரவு தேவை. உலகில்
வெற்றிகரமாக இருந்த எல்லா கேப்டன்களும் இதையே தாரகமந்திரமாக வைத்து
வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே, கோலியும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என கிளார்க் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்